"சாதாரண மழைக்கே சென்னை மிதக்கிறது.." எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

சென்னை முழுவதும் வெள்ளத்தில் மூழ்கி தவிக்கிறது என எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
"சாதாரண மழைக்கே சென்னை மிதக்கிறது.." எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
Published on

சென்னை,

சென்னையில் பெய்துவரும் கனமழை தொடர்பாக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, தனது எக்ஸ் தளத்தில் கூறி இருப்பதாவது;

"சுமார் நான்காயிரம் கோடி ரூபாய் மதிப்பில் சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொண்டதாக மார்தட்டும் திமுக அரசின் இரண்டரை ஆண்டு கால ஆட்சி இதுவரை ஒரு புயலை கூட சந்திக்கவில்லை. ஆனால் இந்த சாதாரண மழைக்கே சென்னை மிதக்கிறது. இரண்டரை ஆண்டு கால திமுக ஆட்சிக்கு இதுவே சாட்சி என்பது போல் இன்று சென்னை முழுவதும் வெள்ளத்தில் மூழ்கி தவிக்கிறது.

திமுக அரசின் நிர்வாகச் சீர்கேட்டிற்கு, இந்த சாதாரண மழைக்கே தாக்குப்பிடிக்க முடியாத மழைநீர் வடிகால் திட்டமும் அதனால் பரவும் டெங்கு உட்பட பல பருவ மழைக்கால நோய்களால் மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளதே சாட்சி. மக்களின் துயர் துடைக்க அரசே நடவடிக்கை எடுக்கும் என்று நம்பாமல், ஆங்காங்கே உள்ள அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுக என்று கேட்டுக்கொள்கிறேன்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com