மின்சாரம் தாக்கி கொத்தனார் பலி

ஒரத்தநாட்டில் மின்சாரம் தாக்கி கொத்தனார் பரிதாபமாக இறந்தார்.
மின்சாரம் தாக்கி கொத்தனார் பலி
Published on

ஒரத்தநாடு;

ஒரத்தநாட்டில் மின்சாரம் தாக்கி கொத்தனார் பரிதாபமாக இறந்தார்.

மின்சாரம் தாக்கியது

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு டவுன் பகுதியை சேர்ந்த திரவுபதி அம்மன் கோவில் தெருவில் ஒருவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். நேற்று இந்த வீடு கட்டும் பணியில் கண்ணந்தங்குடி மேலையூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் (வயது47) ஈடுபட்டிருந்தார். அப்போது இடையூறாக கிடந்த இரும்பு கம்பியை பிரபாகரன் எடுத்து அப்புறப்படுத்த முயன்றபோது, இரும்பு கம்பி மேலே சென்ற மின்சார கம்பி மீது உரசியது. இதனால் மின்சாரம் தாக்கி கொத்தனார் பிரபாகரன் தூக்கி வீசப்பட்டார்.

பரிதாபமாக சாவு

இதில் உயிருக்கு போராடிய அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஒரத்தநாடு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பிரபாகரனை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து பிரபாகரன் மகன் பிரதீப் கொடுத்த புகாரின் பேரில் ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com