மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் மனு கொடுக்கும் போராட்டம்


மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் மனு கொடுக்கும் போராட்டம்
x

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளம் கண்டு, பணி நிரந்தரம் செய்ய வேண்டும். காலியாக உள்ள கள உதவியாளர் பணியிடங்களில், ஒப்பந்த ஊழியர்களை, தினக்கூலி அடிப்படையில் நியமித்து, பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்வோம் என்ற தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கலெக்டர் அலுவலகம் மூலமாக முதல்-அமைச்சருக்கு மனு கொடுக்கும் போராட்டம், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு தஞ்சை மின்வட்டக்கிளை சார்பில் நேற்று நடைபெற்றது.போராட்டத்திற்கு வட்ட தலைவர் அதிதூதமைக்கேல்ராஜ் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் ஜெயபால், மின் ஊழியர் மத்திய அமைப்பு கவுரவ தலைவர் கோவிந்தராஜ் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.முன்னதாக அவர்கள் தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டம் முடிந்த பின்னர் கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் 390 கோரிக்கை மனுக்களை அளித்தனர்.


Next Story