மின் ஒப்பந்ததாரர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்


மின் ஒப்பந்ததாரர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 July 2023 2:15 AM IST (Updated: 12 July 2023 2:15 AM IST)
t-max-icont-min-icon

அனைத்து மின் ஒப்பந்ததாரர்கள், மின் பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கோயம்புத்தூர்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு அனைத்து மின் ஒப்பந்ததாரர்கள், மின் பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொதுச் செயலாளர் அய்யாசாமி தலைமை தாங்கினார். மாநில தலைவர் கோவிந்தராஜ், செயலாளர் சண்முகம், பொருளாளர் சந்திர மோகன் ஆகியோர் முன்னிலைவகித்தனர். இதில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:-


மின் உரிமம் மின்வாரிய பிரிவு அலுவலகங்களில் பதிவு செய்யப்பட வேண்டும். படிவம் 2-ல் ஒயரிங் காண்ட்ராக்டர் சீல், கையொப்பம், காலாவதி தேதி செய்து விண்ணப்பத்துடன் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

அவ்வாறு இல்லாத விண்ணப்பங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட வேண்டும். வீட்டு உரிமையாளர்கள், சிவில் என்ஜினீயர்கள், மேஸ்திரிகள், மின் உரிமம் பெற்ற ஒயரிங் காண்ட்ராக்டர்களின் மேற்பார்வையில் மின்சாரப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லாத கட்டிடத்துக்கு மின் இணைப்பு வழங்க கூடாது.

உரிமம் வழங்கல், புதுப்பித்தல் ஆகியவற்றை ஆன்லைன் முறையில் பதிவு செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும். 2,000 சதுர அடி வரை உள்ள வணிக கட்டிடங்களுக்கும் நிபந்தனை இல்லாமல் மின் இணைப்பு வழங்க வேண்டும்.

ஐ.எஸ்.ஐ. மற்றும் ஐ.எஸ்.ஓ. தரச் சான்று பெற்ற மின் சாதன பொருட்களை மட்டுமே பயன்படுத்துவதை கட்டாயமாக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இதில் மாவட்ட செயலாளர் சகாயராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



Next Story