போடூர்பள்ளம் வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்த யானைகள்


போடூர்பள்ளம் வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்த யானைகள்
x
தினத்தந்தி 18 Jan 2023 12:15 AM IST (Updated: 18 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சானமாவு காட்டில் இருந்து போடூர்பள்ளம் வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்த யானைகளால் சூளகிரி பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி

சூளகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சானமாவு காட்டுப்பகுதியில் 40-க்கும் மேற்பட்ட யானைகள் ஊடேதுர்க்கம் வழியாக சானமாவு காட்டுக்குள் புகுந்தன. இந்த யானைகள் சூளகிரி அருகே போடூர்பள்ளம் வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்தன. யானைகள் வனப்பகுதியையொட்டி உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தின. இதனால் விவசாயிகள் கவலை டைந்தனர். இந்த யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். போடூர்பள்ளம் வனப்பகுதியில் யானைகள் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.


Next Story