சானமாவு வனப்பகுதியில் 80 யானைகள் முகாம்

சானமாவு வனப்பகுதியில் 80 யானைகள் முகாம்
x
தினத்தந்தி 12 Feb 2023 12:15 AM IST (Updated: 12 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் 60 யானைகள் முகாமிட்டு சுற்றித்திரிகின்றன. இந்த யானைகள், இரவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி கிராம பகுதிகளில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.

கிருஷ்ணகிரி

ஓசூர்

ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் 60 யானைகள் முகாமிட்டு சுற்றித்திரிகின்றன. இந்த யானைகள், இரவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி கிராம பகுதிகளில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில், நேற்று மீண்டும் ஊடேதுர்க்கம் வனப்பகுதியில் இருந்து சானமாவு வனப்பகுதிக்கு மேலும் 20 காட்டு யானைகள் இடம்பெயர்ந்தன. இதனால் சானமாவு வனப்பகுதியில் தற்போது 80 யானைகள் முகாமிட்டுள்ளன. இதுகுறித்து பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் வனத்துறையினர் விரைந்து சென்று யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்தனர். இந்த யானைகளை உடனடியாக அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சானமாவு காட்டில் 80 யானைகள் முகாமிட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Next Story