சாலையை கடந்த யானைகள்


சாலையை கடந்த யானைகள்
x
தினத்தந்தி 14 Feb 2023 12:15 AM IST (Updated: 14 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

அஞ்செட்டி அருகே நேற்று யானைகள் சாலையை கடந்து மலசோனை வனப்பகுதிக்கு சென்றன. அவற்றை கர்நாடக வனப்பகுதிக்கு விரட்ட வனத்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை

அஞ்செட்டி அருகே நேற்று யானைகள் சாலையை கடந்து மலசோனை வனப்பகுதிக்கு சென்றன. அவற்றை கர்நாடக வனப்பகுதிக்கு விரட்ட வனத்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

யானைகள்

கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து 100-க்கும் மேற்பட்ட யானைகள் தேன்கனிக்கோட்டை, ஓசூர், ஜவளகிரி, ராயக்கோட்டை வனப்பகுதிக்கு வந்தன. இந்த யானைகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து வனப்பகுதிகளில் முகாமிட்டுள்ளன. இதுகுறித்து தகவல் அறிந்ததும் வனத்துறையினர் விரைந்து சென்று யானைகளை கர்நாடக வனப்பகுதிக்கு விரட்ட நடவடிக்கை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் முகாமிட்டிருந்த 80 யானைகள் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு விரட்டப்பட்டன. இந்த யானைகள் நேற்று முன்தினம் சூரப்பன் குட்டை வனப்பகுதியில் முகாமிட்டு அப்பகுதியில் பாலேகுளி, திம்மசந்திரம், லட்சுமிபுரம் உள்ளிட்ட கிராமங்களில் பயிர்களை சேதப்படுத்தின.

சாலையை கடந்த யானைகள்

இதையடுத்து வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் விரைந்து சென்று யானைகளை பட்டாசுகள் வெடித்து கர்நாடகா மாநிலத்திற்கு விரட்டும் பணியில் ஈடுபட்டனர். மரகட்டா கிராமம் அருகே முகாமிட்டு இருந்த 80 யானைகளும் 4 குழுக்களாக பிரிந்தன. இதில் 20-க்கும் மேற்பட்ட யானைகள் நேற்று அஞ்செட்டி அருகே சாலையை கடந்து மலசோனை வனப்பகுதிக்கு சென்றன.

இங்கிருந்து முள்பிளாட், பாலதொட்டனப்பள்ளி வழியாக ஜவளகிரி வனப்பகுதிக்கு யானைகளை விரட்டி அங்கிருந்து கர்நாடக மாநில வனப்பகுதிக்கு விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் காடு லக்கசந்திரம் கிராமத்தில் முகாமிட்டிருந்த ஒற்றை யானையையும் வனத்துறையினர் கர்நாடக வனப்பகுதிக்கு விரட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


Next Story