தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பை, தமிழர்களுக்கு வழங்க வேண்டும்


தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பை, தமிழர்களுக்கு வழங்க வேண்டும்
x

தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பை, தமிழர்களுக்கு வழங்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

ராணிப்பேட்டை

சோளிங்கரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. நகர அமைப்பாளர்கள் நேதாஜி, ரஞ்சித் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். சிறப்பு அழைப்பாளராக மண்டல பொறுப்பாளர் ஜம்புலிங்கம், மாநில துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் சுதாகர், மாவட்டத் தலைவர் கோபால் ஆகியோர் கலந்து கொண்டு கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கினார்கள்.

கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள வேலை வாய்ப்பை தமிழர்களுக்கு வழங்க வேண்டும், தமிழகத்தில் ஜாதி வாரியாக கணக்கெடுப்பு செய்து அதன்படி கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், சோளிங்கர் நகரில் காட்டன் சூதாட்டம், சீட்டாட்டம் நடைபெற்று வருவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விஜய், ஆகாஷ், விஜயகுமார், பரத், செல்வம், கோபி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story