என்ஜின் பழுது: குமரி மீனவர்கள் 12 பேர் நடுக்கடலில் தவிப்பு

ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது விசைப்படகின் எந்திரம் கோளாறு காரணமாக பழுது ஏற்பட்டது.
என்ஜின் பழுது: குமரி மீனவர்கள் 12 பேர் நடுக்கடலில் தவிப்பு
Published on

குமரி,

குமரி மேற்கு மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் ஆழ்கடலில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்த நிலையில், இரவிபுத்தன் துறை பகுதியை சேர்ந்த அருளப்பன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த 11-ந்தேதி கொச்சி துறைமுகத்திலிருந்து 12 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

இவர்கள் கடந்த 15-ந்தேதி ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இவர்களது விசைப்படகின் எந்திரம் கோளாறு காரணமாக பழுது ஏற்பட்டது. ஆழ்கடலில் இவர்கள் தற்போது தத்தளித்து வருகிறார்கள். இந்த தகவல் இரவிபுத்தன்துறையில் உள்ள அருளப்பன் குடும்பத்தினருக்கு தெரியவந்தது. மேலும் மீனவ அமைப்புகளுக்கும் இந்த தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர் அமைப்பினர் தமிழக முதல் அமைச்சர், மீன்வளத்துறை அமைச்சர், மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றபோது எந்திர கோளாறு ஏற்பட்டதால் விசைப்படகில் 12 மீனவர்கள் நடுக்கடலில் தத்தளித்து வருகிறார்கள். தற்பொழுது அவர்கள் இந்திய-ஓமன் கடல் எல்லையில் தத்தளிப்பதாக தெரிகிறது. எனவே அவர்களை மீட்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com