பொறியியல் மாணவர்கள் சேர்க்கைகான தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு

பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைகான தரவரிசைப் பட்டியல் இணையதளத்தில் திங்கள்கிழமை (நாளை) வெளியிடப்படவுள்ளது.
பொறியியல் மாணவர்கள் சேர்க்கைகான தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு
Published on

சென்னை,

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 450-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் 1.54 லட்சம் இளநிலை பட்டப் படிப்பு இடங்கள் உள்ளன. இதற்கான 2023-2024-ஆம் கல்வியாண்டு மாணவா சேர்க்கை விண்ணப்பப் பதிவு மே 5-ஆம் தேதி முதல் ஜூன் 4-ஆம் தேதி வரை நடைபெற்றது.

பொறியியல் கல்லூரிகளில் சேர மொத்தம், 2 லட்சத்து 29 ஆயிரத்து 167 விண்ணப்பங்கள் பதிவாகின. 1 லட்சத்து 55 ஆயிரத்து 124 பே விண்ணப்பக் கட்டணங்களுடன், சான்றிழ்களை பதிவேற்றம் செய்தனர். இவாகளுக்கான சான்றிதழ் சரிபாப்புப் பணிகள் கடந்த 20-ஆம் தேதி நிறைவடைந்தது.

இந்த நிலையில், பொறியியல் கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் நாளை (திங்கள்கிழமை) வெளியாகிறது. மாணவாகள், தரவரிசை பட்டியலை இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். தரவரிசை பட்டியல் வெளியான பிறகு, தரவரிசை தொடாபாக புகாகளைத் தெரிவிக்க ஜூன் 30-ஆம் தேதி வரை மாணவாகளுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com