ஆங்கில மன்றம் தொடக்க விழா


ஆங்கில மன்றம் தொடக்க விழா
x

செஞ்சி அரசு பள்ளியில் ஆங்கில மன்றம் தொடக்க விழா

விழுப்புரம்

செஞ்சி

செஞ்சியில் உள்ள ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில மன்றம் தொடக்க விழா நடைபெற்றது. இதற்கு தலைமை ஆசிரியர் கணபதி தலைமை தாங்கி ஆங்கில மன்றத்தை தொடங்கி வைத்தார். உதவி தலைமை ஆசிரியர் குப்புசாமி வாழ்த்துரை வழங்கினார். இதில் மாணவர்களுக்கு கலை நிகழ்ச்சிகள் மற்றும் காமராஜர் பற்றிய பேச்சு உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆசிரியர்கள் வாசுவதத்தை, லட்சுமி, அசோக், அன்பு ஆகியோர் செய்திருந்தனர். இதில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். முடிவில் ஆசிரியர் அசோக் நன்றி கூறினார்.

1 More update

Next Story