இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிகளில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் திடீர் ஆய்வு


இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிகளில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் திடீர் ஆய்வு
x

மதுரை தத்தனேரி, பழங்காநத்தம் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிகளில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் திடீரென்று ஆய்வு செய்தார்.

மதுரை

மதுரை தத்தனேரி, பழங்காநத்தம் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிகளில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் திடீரென்று ஆய்வு செய்தார்.

அமைச்சர் ஆய்வு

மதுரை பழங்காநத்தம் இ.எஸ்.ஐ.ஆஸ்பத்திரி மற்றும் மருந்தகங்களில் தொழிலாளர் துறை அமைச்சர் கணேசன் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு ஒவ்வொரு அறையாக சென்று பார்வையிட்டார். அப்போது கை கழுவும் இடம் மிகவும் மோசமாக இருந்தது. அதை அவரே சுத்தப்படுத்தி, இதே போன்று அனைத்து இடங்களையும் சுத்தமாக வைத்திருக்கும்படி உத்தரவிட்டார்

பின்னர் தத்தனேரியில் உள்ள இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு ஒவ்வொரு நோயாளிகளிடமும் அவர்களது நோய் குறித்தும் சிகிச்சை தன்மை, மாத்திரைகள் தரம் குறித்தும் மற்றும் நோய்க்கு தகுந்த சிகிச்சை அளிக்கிறார்களா? ஏதும் குறைபாடுகள் உள்ளதா? என கேட்டறிந்தார். மேலும் அங்கிருந்த சித்தா, ஓமியோபதி, ஆயுர்வேத ஆஸ்பத்திரிகளையும் ஆய்வு செய்தார்.

ஆய்வுக்கு பின்னர் அமைச்சர் கணேசன் கூறும் போது, இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிகள் சிறப்பாக செயல்படுகிறதா? என்பதை ஆய்வு செய்ய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில் மதுரையில் ஆய்வு மேற்கொண்டேன். மேலும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆஸ்பத்திரிகளில் ஆய்வு செய்து தொழிலாளர்களுக்கு மருத்துவ உதவி சிறப்பாக இருக்க வேண்டும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தத்தனேரியில் உள்ள ஆஸ்பத்திரி மிகவும் பழமை வாய்ந்தது. 60 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படும் இந்த மருத்துவமனையில் ஆய்வு செய்து நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தேன்.

1 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு

தமிழகத்தில் மொத்தம் 67 லட்சம் நபர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். எனவே இதுவரை பல்வேறு மாவட்டங்களில் 68 இடங்களில் மெகா வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று அதன் மூலமாக ஒரு லட்சத்து 11 ஆயிரம் இளைஞர்களுக்கு தனியார் தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பினை பெற்றுள்ளனர். மேலும் தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி வித்தியாசம் பாராமல் வேலைவாய்ப்பு முகாமை நடத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்றார்.


Related Tags :
Next Story