எட்டயபுரம், விளாத்திகுளம் பகுதியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள்விழா
எட்டயபுரம், விளாத்திகுளம் பகுதியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள்விழா கொண்டாடப்பட்டது.
எட்டயபுரம்:
விளாத்திகுளம், எட்டயபுரம் பகுதியில் நடைபெற்ற உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கலந்து ெகாண்டார்.
விளாத்திகுளம்
விளாத்திகுளம் பஸ்நிலையம் முன்பு மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க மாநில இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் 45-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அங்குள்ள தி.மு.க. கொடி கம்பத்தில் எம்.எல்.ஏ. கொடியேற்று வைத்து, கேக் வெட்டி இனிப்புகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் அய்யன்ராஜ் துணைத் தலைவர் வேலுச்சாமி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க இளைஞரணி பொறுப்பாளர்கள் இமானுவேல், மகேந்திரன், ஸ்ரீதர் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
படர்ந்தபுளி
தொடர்ந்து படர்ந்தபுளி கிராமத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா மற்றும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் அன்பு ராஜன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் பள்ளி மாணவ- மாணவியர் 192 பேருக்கு நோட்டு புத்தகம், பேனா மற்றும் நலத்திட்ட உதவிகளை எம்.எல்.ஏ. வழங்கினார். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர், கவுன்சிலர்கள் ஒன்றிய நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
எட்டயபுரம்
இதேபோன்று எட்டயபுரம் நகர தி.மு.க இளைஞரணி சார்பில் பஸ்நிலையம் முன்பு ஆதரவற்ற முதியவர்களுக்கு உணவு மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது
விழாவுக்கு கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் நவநீதக்கண்ணன் தலைமை தாங்கினார். எட்டயபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன் முன்னிலை வகித்தார்.விழாவில் சிறப்பு அழைப்பாளராக எம்.எல்.ஏ. கலந்து ெகாண்டு ஆதரவற்ற முதியவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மருத்துவ அணி செயலாளர் டாக்டர்சவுந்தர்ராஜன்,
நகர ஒன்றிய இளைஞர் அணி, மகளிரணி, நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஏரல்
ஏரல் காந்திசிலை அருகில் தி.மு.க. இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் ஏரல் பேரூராட்சி தலைவர் சர்மிளாதேவி மணிவண்ணன் கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினார். ஸ்ரீவைகுண்டம் தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் கோட்டாளம் கட்சி கொடி ஏற்றி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் ஏரல் நகர பொறுப்பாளர் ராயப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி
கோவில்பட்டி நகர தி.மு.க. சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா அண்ணா பஸ் நிலையம் முன்பு கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு நகர செயலாளரும், நகர சபை தலைவருமான கா. கருணாநிதி தலைமை வகித்து கேக் வெட்டி பொது மக்களுக்கு வழங்கினார்.
நிகழ்ச்சியில் தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் ஏஞ்சலா, ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், ராதாகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் என். ராதாகிருஷ்ணன், மாவட்ட பொறியாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் ரமேஷ், மேற்கு ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி லாயல் மில் காலனியில் தி.மு.க. மத்திய ஒன்றிய செயலாளர் முருகேசன் தலைமையில் நடந்த விழாவில் பலர் கலந்து கொண்டனர். இனாம் மணியாச்சி சந்திப்பில் மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ரமேஷ் தலைமையில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
மேற்கு ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் ஏற்பாட்டில் முடுக்கு மீண்டான் பட்டி ஆக்டிவ் மைண்ட்ஸ் பெண்கள் மனநல காப்பகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.