நாகர்கோவிலில் கோர்ட்டு ரோடு ரூ.1½ கோடியில் விரிவாக்கம்;பணிகளை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்


நாகர்கோவிலில் கோர்ட்டு ரோடு ரூ.1½ கோடியில் விரிவாக்கம்;பணிகளை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
x

நாகர்கோவில் கோர்ட்டு ரோட்டை விரிவுபடுத்தி அழகுப்படுத்த ரூ.1½ கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணியை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

நாகர்கோவில் கோர்ட்டு ரோட்டை விரிவுபடுத்தி அழகுப்படுத்த ரூ.1½ கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணியை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

சாலை விரிவாக்கம்

நாகர்கோவில் மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், சாலைகளை விரிவாக்கம் செய்து அழகுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் தற்போது டதி பள்ளி சந்திப்பில் இருந்து பொன்னப்ப நாடார் திடல் வரை உள்ள கோர்ட்டு ரோட்டை விரிவாக்கம் செய்து அழகுப்படுத்த ரூ.1½ கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த பணிகள் நேற்று தொடங்கப்பட்டன. பணிகளை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாகர்கோவில் மாநகரில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சாலையோரங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் டதி பள்ளி சந்திப்பில் இருந்து பொன்னப்பநாடார் திடல் வரை சாலையை விரிவுபடுத்தி அழகுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம்.

நல வாழ்வு மையம்

மேலும் கழிவு நீரோடை சீரமைக்கப்பட உள்ளது. பொதுமக்கள் நடந்து செல்ல வசதியாக நடைபாதை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. டதி பள்ளி சந்திப்பு பகுதியில் வாகனங்களை நிறுத்துவதற்கு கார் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. பொதுமக்கள் அனைவரும் இனி கார் பார்க்கிங் ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே வாகனங்களை நிறுத்த வேண்டும். இந்த சாலையை இருவழிப்பாதையாக மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அலங்கார விளக்குகளும் அமைக்கப்படும்.

இதே போல நாகர்கோவில் மாநகர பகுதியில் 10 இடங்களில் தலா ரூ.25 லட்சம் செலவில் நல வாழ்வு மையம் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு உள்ளோம். நாகர்கோவில் மகளிர் கிறிஸ்தவ கல்லூரி சாலைகளில் இருந்து வெட்டூர்ணிமடம் வரை உள்ள சாலையை மேம்படுத்த ரூ.2½ கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. அங்கு சாலையின் குறுக்கே தடுப்புகள் வைத்து இருவழிப்பாதையாக மாற்றப்படும். கழிவுநீரோடையும் சீரமைத்து அலங்கார விளக்குகள் அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆணையர்

நிகழ்ச்சியில் ஆணையர் ஆனந்த் மோகன், என்ஜினீயர் பாலசுப்ரமணியன், துணை மேயர் மேரி பிரின்சி லதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story