இலங்கை போலீஸ்காரருக்கு காவல் நீட்டிப்பு

இலங்கை போலீஸ்காரருக்கு காவல் நீட்டிப்பு செய்யப்பட்டது.
இலங்கை போலீஸ்காரருக்கு காவல் நீட்டிப்பு
Published on

இலங்கை கொழும்பு புறநகர் பகுதியான சபுகஸ்கந்த பகுதியில் ஒரு மரக்கடையில் இருந்து கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 26-ந் தேதி இலங்கை போலீசார், 23 கிலோ ஹெராயின் போதைப்பொருளை கைப்பற்றினர். இதுதொடர்பாக மரக்கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். அவரின் தகவலின்படி அனுர குமார என்பவரையும் போலீசார் பிடித்தனர். இவர் இலங்கை துறைமுக காவல்நிலைய போலீஸ் காரர் பிரதீப் குமார் பண்டாராவின் (வயது 32) அண்ணன் என்பது விசாரணையில் தெரியவந்தது. இந்த பிரதீப் குமார் பண்டாரா தான், இலங்கை துறைமுக காவல் நிலையத்தில் போலீசார் கைப்பற்றி வைத்திருந்த போதைப்பொருளை தனது பணி நேரத்தில் திருடி தனது சகோதரர் மூலம் கொடுத்திருக்கலாம் என இலங்கை போலீசார் சந்தேகித்தனர். இதனால் பிரதீப் குமார் பண்டாராவை வழக்கில் சேர்த்து விசாரிக்க அந்நாட்டு போலீசார் முடிவு செய்தனர். இது பற்றி அறிந்த அவர் பைபர் படகு மூலம் தமிழகம் தப்பிவந்தார்.

கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் 4-ந் தேதி மண்டபம் கடலோர போலீசார் அவரை கைது செய்து சென்னை பூந்தமல்லி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. சிறையில் இருந்த பிரதீப் குமார் பண்டாரா ஜாமீன் பெற்று, திருச்சி முகாமிற்கு மாற்றப்பட்டார். இந்த வழக்கு விசாரணைக்காக அவர் ராமநாதபுரம் நீதித்துறை நடுவர் கோர்ட்டில் ஆஜரானார். அவரிடம் விசாரணை நடத்திய நீதிபதி வழக்கு விசாரணையை வரும் 27-ந் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com