தனியார் நிதிநிறுவன ஊழியரை மிரட்டி நகை - பணம் பறிப்பு


தனியார் நிதிநிறுவன ஊழியரை மிரட்டி நகை - பணம் பறிப்பு
x
தினத்தந்தி 9 July 2023 11:26 PM IST (Updated: 10 July 2023 4:45 PM IST)
t-max-icont-min-icon

ராணிப்பேட்டையில் தனியார் நிதிநிறுவன ஊழியரை மிரட்டி நகை- பணம் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை காரை அந்தோணியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி (வயது 40). தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் கடன் வசூல் செய்யும் முகவராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு ராணிப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே கடன் வசூல் செய்து கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த ராணிப்பேட்டை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த இளம்பரிதி (32), ஆர்.ஆர்.ரோட்டை சேர்ந்த சண்முகப்பிரியன் ஆகிய இருவரும், தியேட்டரில் படம் பார்க்கும்போது சண்டை ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக தகராறு செய்து, கத்தியை காட்டி மிரட்டி ராஜீவ்காந்தி அணிந்திருந்த 2 பவுன் செயின், ரூ.7,500 ஆகியவற்றை பறித்து சென்றதாக கூறப்படுகிறது.

அதன்பேரில் ராணிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி 2 பேர் மீதும் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.


Next Story