காவல்துறை மானியக் கோரிக்கையை விமர்சித்து முகநூலில் பதிவு: மேலும் ஒரு காவலர் பணியிடை நீக்கம்

காவல்துறை மானியக் கோரிக்கையை விமர்சித்து முகநூலில் பதிவு: மேலும் ஒரு காவலர் பணியிடை நீக்கம்
x

காவல்துறை மீதான மானிய கோரிக்கையை விமர்சித்து முகநூலில் மீம் வீடியோ பதிவிட்டதாக மேலும் ஒரு காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை,

காவல்துறை மீதான மானிய கோரிக்கையை விமர்சித்து முகநூலில் மீம் வீடியோ பதிவிட்டதாக மேலும் ஒரு காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றக்கூடிய பாலமுருகன் என்பவர் சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தாக்கல் செய்த காவல்துறை மானிய கோரிக்கையை விமர்சித்து முகநூலில் மீம் வீடியோ பதிவிட்டிருந்தார். இதற்காக அவரை சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில் தற்போது போரூர் காவல்நிலையத்தின் முதன்மை காவலர் கோபிகண்ணன் காவல்துறை மானிய கோரிக்கையை விமர்சித்து முகநூலில் வீடியோ வெளியிட்டதாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரை ஆவடி மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

காவல்துறை மானிய கோரிக்கையை விமர்சித்து வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் இதுவரை 2 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Next Story