சத்தியமங்கலத்தில் மின்சாரம் தாக்கி விவசாயி சாவு- தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்ச ெசன்றபோது பரிதாபம்


சத்தியமங்கலத்தில் மின்சாரம் தாக்கி விவசாயி சாவு- தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்ச ெசன்றபோது பரிதாபம்
x

சத்தியமங்கலத்தில் தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற விவசாயி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

ஈரோடு

சத்தியமங்கலம்

சத்தியமங்கலத்தில் தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற விவசாயி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

மயங்கி கிடந்தார்

சத்தியமங்கலம் அடுத்துள்ள ஆலத்துக்கோம்பையை சேர்ந்தவர் பாப்பாகவுண்டர். அவருடைய மனைவி அங்குத்தாய். இவர்களுடைய மகன் ராஜேந்திரன் (வயது 39). விவசாயி. திருமணம் ஆகாதவர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை ராஜேந்திரன் கரும்பு தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார். இரவு 8 மணி ஆன பின்னரும் ராஜேந்திரன் வீட்டுக்கு வரவில்லை. இதனால் பாப்பாகவுண்டர், அங்குத்தாய் இருவரும் மகனை தேடி தோட்டத்துக்கு சென்றனர். அப்போது தோட்டத்தில் இருந்த ஒரு மின்கம்பத்தின் எர்த் கம்பியை கையில் பிடித்தபடி ராஜேந்திரன் மயங்கி கிடந்தார். இதனால் மகனை மின்சாரம் தாக்கிவிட்டது என்று தெரிந்து கொண்ட பாப்பாகவுண்டர் அக்கம் பக்கத்து விவசாயிகளை சத்தம் போட்டு அழைத்தார்.

விசாரணை

சத்தம் கேட்டு அங்கு ஓடிவந்த விவசாயிகள், உடனே ஓடிச்சென்று மின் இணைப்பை துண்டித்தனர். அதன்பின்னர் ராஜேந்திரனை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், வரும் வழியிலேயே ராஜேந்திரன் உயிரிழந்து விட்டதாக கூறினர்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும், சத்தியமங்கலம் போலீசார் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று ரஜேந்திரனின் உடலை கைப்பற்றினார்கள். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகனின் உடலை பார்த்து பாப்பாகவுண்டரும், அங்குத்தாயும் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.


Next Story