பள்ளிபாளையத்தில்தென்னை விவசாயிகள் சாலையில் தேங்காய்களை உடைத்து போராட்டம்


பள்ளிபாளையத்தில்தென்னை விவசாயிகள் சாலையில் தேங்காய்களை உடைத்து போராட்டம்
x
தினத்தந்தி 12 July 2023 7:00 PM GMT (Updated: 12 July 2023 7:00 PM GMT)
நாமக்கல்

பள்ளிபாளையம்:

தமிழகம் முழுவதும் சுமார் 5 லட்சம் ஏக்கரில் தென்னை பயிரிடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தென்னை மர விவசாயிகளுக்கு போதிய விலை கிடைப்பதில்லை என்றும், அவர்களுக்கு தேவையான வசதிகள் அளிக்ககோரி தமிழக முழுவதும் நேற்று தேங்காய் உடைக்கும் போராட்டம் நடைபெற்றது.

இதனையொட்டி பள்ளிபாளையம் ஒன்றியம் மொளசி பஸ் நிறுத்த சாலையில் விவசாயிகள் ஒன்று கூடினர். சங்கத்தலைவர் பூபதி தலைமை தாங்கினார். நிர்வாகி ஆதிநாராயணன் வரவேற்றார். நல்லா கவுண்டர், பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதையடுத்து ஏராளமான தென்னை விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலையில் தேங்காய்களை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் தேங்காயை 50 ரூபாய்க்கு அரசு கொள்முதல் செய்ய வேண்டும். கொப்பரை தேங்காய் 140 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட வேண்டும். ரேஷன் கடைகளில் மானிய விலையில் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும். பயிர் இன்சூரன்ஸ் வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு மானிய விலையில் விவசாய கருவிகள் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதேபோல் நேற்று மாலை வெப்படை பகுதியிலும் தேங்காய் உடைக்கும் போராட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.


Next Story