விவசாயிகள் மகிழ்ச்சி


விவசாயிகள் மகிழ்ச்சி
x

தொடர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அரியலூர்

தா.பழூர் சுற்றுவட்டார பகுதிகளில் வானில் மேகங்கள் திரள்வதும், லேசான தூறல் மழை பெய்வதுமாக இருந்தது. பலத்த மழை பெய்யாததால் விவசாயிகள் உள்ளிட்டோர் ஏமாற்றமடைந்தனர். மேலும் தா.பழூர் வட்டாரத்தில் மழை காரணமாக எந்த ஏரி, குளமும் நிரம்பாத நிலையே நீடித்து வந்தது.

இந்நிலையில் கடந்த வாரம் வங்கக்கடலில் ஏற்பட்ட மண்டஸ் புயல் காரணமாக மழை பெய்யும் என எதிர்பார்த்திருந்த நிலையில், அப்போதும் மழை பெய்யவில்லை. இதனால் இந்த ஆண்டு தா.பழூர் சுற்றுவட்டார பகுதிகளில் பருவமழை பொய்த்து போனதாக நினைத்திருந்த நிலையில், நேற்று முன்தினம் இரவில் இருந்து நேற்று வரை திடீரென விட்டு விட்டு பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் இப்பகுதியில் தொடர்ந்து மேகமூட்டமாகவே இருந்து வருகிறது. எனவே தொடர்ந்து மழை பெய்யும் என்று இப்பகுதி மக்கள் நம்பிக்கையுடன் எதிர்பார்த்துள்ளனர்.

1 More update

Related Tags :
Next Story