நேரடி நெல் விதைப்புக்காக வயலை தயார் செய்யும் பணியில் விவசாயிகள்


நேரடி நெல் விதைப்புக்காக வயலை தயார் செய்யும் பணியில் விவசாயிகள்
x
தினத்தந்தி 7 July 2023 12:15 AM IST (Updated: 7 July 2023 4:26 PM IST)
t-max-icont-min-icon

நேரடி நெல் விதைப்புக்காக வயலை தயார் செய்யும் பணியில் விவசாயிகள்

திருவாரூர்

மன்னார்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் குறுவை சாகுபடிக்கான ஆயத்த பணிகளை விவசாய தொழிலாளர் பற்றாக்குறை, விவசாயத்திற்கான செலவு குறைவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு தற்போது நேரடி நெல் விதைப்பு செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். மழை அவ்வப்போது பெய்யும் நிலையில் நேரடி நெல் விதைப்புக்கான ஆயத்த பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். பல விவசாயிகள் நேரடி நெல் விதைக்க வயலை தயார் செய்யும் பணியை தொடங்கினர். மன்னார்குடி சுற்றுவட்டார கிராமங்களான பரவாக்கோட்டை, கூப்பாச்சி கோட்டை, கண்டிதம்பேட்டை, உள்ளிக்கோட்டை, மகாதேவபட்டினம், சவளக்காரன், பாமணி உள்ளிட்ட கிராமங்களில் வயலில் டிராக்டர் கொண்டு உழுது நெல் விதைப்பு பணிக்கு வயலை தயார் செய்து வருகின்றனர்.

1 More update

Next Story