தேயிலை செடிகளுக்கு இடையே ஊடுபயிராக பாக்கு பயிரிடும் விவசாயிகள்


தேயிலை செடிகளுக்கு இடையே ஊடுபயிராக பாக்கு பயிரிடும் விவசாயிகள்
x
தினத்தந்தி 11 Sept 2023 2:00 AM IST (Updated: 11 Sept 2023 2:00 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர் பகுதியில் தேயிலை செடிகளுக்கு இடையே ஊடுபயிராக பாக்கு மரங்களை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.

நீலகிரி

கூடலூர்

கூடலூர் பகுதியில் தேயிலை செடிகளுக்கு இடையே ஊடுபயிராக பாக்கு மரங்களை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.

விலை வீழ்ச்சி

நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் பிரதானமாக உள்ளது. சிறு, குறு விவசாயிகள் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேயிலை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் பல ஆண்டுகளாக செலவினத்துக்கு ஏற்ப பச்சை தேயிலைக்கு போதிய விலை கிடைக்கவில்லை. இதனால் விவசாயிகள் அவதி அடைந்து வருகின்றனர். இந்தநிலையில் பச்சை தேயிலை விலை நாளுக்கு நாள் வீழ்ச்சி அடைந்து வருகிறது. இதனால் உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

கூடலூர் பகுதியில் தேயிலை விவசாயத்துக்கு இணையாக காபி, குறுமிளகு, இஞ்சி, நேந்திரன் வாழை மற்றும் பலவகை காய்கறிகளும் விளைகிறது. இந்தநிலையில் பச்சை தேயிலைக்கு போதிய விலை கிடைக்காததால் தோட்டங்களில் பராமரிப்பு பணிகளும் முறையாக மேற்கொள்ளப்படாமல் உள்ளது. இதனால் தேயிலை தோட்டங்கள் புதர்கள் படர்ந்து காணப்படுகிறது. மேலும் தேயிலை விவசாயத்தை படிப்படியாக கைவிடும் சூழ்நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டு உள்ளனர்.

ஊடுபயிராக பாக்குகள்

இதனால் தேயிலை விவசாயத்தை மட்டும் எதிர்பாராமல் தோட்டங்களில் நிரந்தர வருமானம் தரக்கூடிய பயிர்களையும் ஊடுபயிராக விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலை செடிகளுக்கு இடையே சில்வர் ஓக் மரத்திற்கு பதிலாக பாக்கு மரங்களை விவசாயிகள் பயிரிட்டு பராமரித்து வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

பச்சை தேயிலை விலை அடியோடு குறைந்து விட்டது. இதனால் தோட்டங்களை பராமரிப்பதற்கான செலவினங்களை ஈடு செய்ய முடியவில்லை. மேலும் வேறு தொழிலுக்கு செல்ல முடியாமல் உள்ளோம். இதனால் தேயிலை தோட்டங்களில் ஊடு பயிராக பாக்கு மரங்களை பயிரிட்டு பராமரித்து வருகிறோம். பாக்கு விவசாயத்தில் நிரந்தர வருமானம் கிடைக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


Related Tags :
Next Story