உழவர் சந்தையில் மஞ்சப் பை தானியங்கி எந்திரம்


உழவர் சந்தையில் மஞ்சப் பை தானியங்கி எந்திரம்
x

ராணிப்பேட்டை உழவர் சந்தையில் மஞ்சப் பை தானியங்கி எந்திரத்தை அமைச்சர் காந்தி தொடங்கிவைத்தார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை உழவர் சந்தையில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில், முருகப்பா மார்கன் தெர்மல் செராமிக்ஸ் நிறுவனத்தின் சி.எஸ்.ஆர்.நிதி திட்டத்தில், ரூ.1½ லட்சம் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள மஞ்சப்பை தானியங்கி எந்திரத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார்.

கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தானியங்கி எந்திரத்தை தொடங்கி வைத்தார்.

இந்த மஞ்சப்பை தானியங்கி எந்திரத்தில் 500 எண்ணிக்கையிலான மஞ்சப்பைகளை நிரப்ப முடியும். 10 ரூபாய் நாணயம் அல்லது இரண்டு 5 ரூபாய் நாணயம் அல்லது 10 ரூபாய் நோட்டு செலுத்தி ஒரு மஞ்சப்பையை பெற்றுக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் ஜெ.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், நகரமன்ற தலைவர் சுஜாதா வினோத், துணைத் தலைவர் ரமேஷ் கர்ணா, உதவி செயற்பொறியாளர் சந்திரசேகரன் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story