விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திருவையாறு அருகே விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவையாறு;
திருவையாறு அருேக உள்ள மேலத்திருப்பூந்துருத்தி துணை வேளாண் விரிவாக்க மையம் முன்பு, தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆர்ப்பாட்டத்தில், பயிர் அறுவடை முடிந்து 4 மாதங்கள் கடந்த பிறகும் இதுவரை பயிர் மகசூல் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை. எனவே கால தாமதத்துக்கான வட்டியுடன் இழப்பீட்டுத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.கடந்த ஆண்டு சொற்ப அளவில் சில கிராமங்களுக்கு மட்டும் மிகக் குறைவான பயிர் மகசூல் இழப்பீட்டுத்தொகை வழங்கப்பட்டது. இதுபோன்ற முரண்பாடுகள், குளறுபடிகள் இல்லாமல் பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினா். ஆர்ப்பாட்டத்தில் மருத்துவக்குடி முருகேசன், சங்க செயலாளர் சுவாமிமலை சுந்தரவிமல்நாதன், துணை செயலாளர் திருப்பூந்துருத்தி சுகுமாரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.