விவசாயிகள், தேங்காய்களை உடைத்து போராட்டம்


விவசாயிகள், தேங்காய்களை உடைத்து போராட்டம்
x
தினத்தந்தி 13 July 2023 1:24 AM IST (Updated: 13 July 2023 5:05 PM IST)
t-max-icont-min-icon

விவசாயிகள், தேங்காய்களை உடைத்து போராட்டம்

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டையில் தேங்காய்க்கு கட்டுப்படியான விலை கேட்டு விவசாயிகள் தேங்காய் உடைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகள் சங்க கூட்டம்

பட்டுக்கோட்டை பஸ் நிலையம் அருகே தென்னை விவசாயிகள் சங்க கூட்டம் மாவட்ட தலைவர் செல்வம் தலைமையில் நடந்தது.

இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் சாமிநடராஜன் கலந்துகொண்டு பேசினார். கூட்டத்திற்கு பழனிவேலு, வேலுச்சாமி, செந்தில்குமார், அரங்கசாமி, ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கந்தசாமி, வேதாசலம், சோமசுந்தரம், மகாலிங்கம், கோவிந்தராஜ் கருப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஊர்வலம்

அதனை தொடர்ந்து பட்டுக்கோட்டை பஸ் நிலையம் அருகே இருந்து தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கத்தினர் ஊர்வலமாக புறப்பட்டு மணிக்கூண்டு, முத்துப்பேட்டை ரோடு வழியாக 2 கிலோ மீட்டர் தூரம் உள்ள கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு வந்தனர்.

கொப்பரை கிலோ ஒன்றுக்கு தமிழ்நாடு அரசு ஊக்கத்தொகை அளித்து ரூ.140 விலை நிர்ணயித்து ஆண்டுதோறும் கொள்முதல் செய்ய வேண்டும். உரித்த முழு தேங்காய் கிலோ ஒன்றுக்கு ரூ.50 விலை நிர்ணயித்து கூட்டுறவு சங்கம் மூலம் கொள்முதல் செய்ய வேண்டும்.

தேங்காய் உடைக்கும் போராட்டம்

ரேஷன் கடைகள் அனைத்திலும் தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்த வேண்டும். சத்துணவு மையங்களில் சமையலுக்கு தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்த வேண்டும்.

பாதிக்கப்பட்ட அனைத்து தென்னை மரங்களுக்கும் நிவாரணத் தொகை வழங்க வேண்டும். தென்னையை தோட்ட கலை துறைக்கு மாற்ற வேண்டும். தென்னை விவசாயிகளுக்கு உரம், பூச்சி மருந்து எந்திரங்கள் முழு மானியத்துடன் வழங்க வேண்டும். தென்னை சார்ந்த தொழிற்சாலைகளை தஞ்சை மாவட்டத்தில் தொடங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தென்னை விவசாயிகள் நூற்றுக்கணக்கான தேங்காய்களை உடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்ேபாது அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.


Next Story