விவசாயிகள் கஞ்சி தொட்டி திறந்து போராட்டம்
சுல்தான்பேட்டை அருகே 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கஞ்சி தொட்டி திறந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுல்தான்பேட்டை
சுல்தான்பேட்டை அருகே 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கஞ்சி தொட்டி திறந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர் போராட்டம்
தமிழக அரசு ேரஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக மானிய விலையில் தேங்காய் எண்ணையை விற்பனை செய்ய வேண்டும். மத்திய அரசு விவசாயிகள் உற்பத்தி செய்யும் அனைத்து உணவு பொருட்களுக்கும் உற்பத்தி செலவுடன் 50 சதவீதம் கூடுதலாக சேர்த்து விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்ய வேண்டும். கள் இறக்கி விற்பனை செய்ய அனுமதி அளிக்க வேண்டும். 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை விவசாயத்திற்கு மட்டும் அமல்படுத்த வேண்டும்.
வக்பு வாரியமும், இந்து அறநிலைத்துறையும் இனாம் நிலங்களை உரிமை கொண்டாடுவதை தடை செய்ய வேண்டும். மயில், காட்டுப்பன்றி, மான், யானை உள்ளிட்ட வனவிலங்குகள் ஏற்படுத்தும் சேதத்திற்கு உடனடியாக சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 5-ந்தேதி முதல் சுல்தான்பேட்டை ஒன்றியம் பச்சார்பாளையத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கஞ்சி தொட்டி திறப்பு
இந்த நிலையில் 9-வது நாளான நேற்று விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கஞ்சி காய்ச்சி கஞ்சித்தொட்டி திறந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நிர்வாகிகள் அரசேந்திரன், வேலு மந்திராசலம் மற்றும் அங்கலக்குறிச்சி பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.