பெண் தூக்குப்போட்டு தற்கொலை
ஆரல்வாய்மொழி அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆரல்வாய்மொழி:
ஆரல்வாய்மொழி அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆரல்வாய்மொழி அருகே உள்ள மாதவலாயம் அரபாத் தெருவை சேர்ந்தவர் அப்துல் மஜித் (வயது 60). இவர் துபாயில் என்ஜினீயராக உள்ளார். தற்போது ஊருக்கு வந்துள்ளார். இவருடைய மனைவி சம்சத் பேகம் (50). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். இதில் ஒரு மகனுக்கு திருமணம் ஆகிவிட்டது. கடந்த சில வருடங்களாக சம்சத் பேகம் முதுகுவலி மற்றும் மூட்டுவலியால் அவதிபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் சம்சத் பேகம் வீட்டின் பின்புறத்தில் உள்ள ஒரு அறையில் தூக்கில் தொங்கி கொண்டிருந்தார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சம்சத் பேகம் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.