தூக்குப்போட்டு பெண் தற்கொலை

ஆலங்குடி அருகே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூக்குப்போட்டு பெண் தற்கொலை
Published on

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள மாங்கோட்டை தெற்குப்பட்டியை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மனைவி சுசிலா (வயது 39). இவர்களுக்கு சுகிலன் (14), தரண்யாஸ்ரீ (11) என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அய்யப்பன் தினந்தோறும் மது குடித்துவிட்டு வந்து மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட சுசிலா நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுசீலா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து செம்பட்டி விடுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் அய்யப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com