நலிந்த கிராமிய கலைஞர்களுக்கு நிதி உதவி


நலிந்த கிராமிய கலைஞர்களுக்கு நிதி உதவி
x

நலிந்த கிராமிய கலைஞர்களுக்கு நிதி உதவி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலை பண்பாட்டு துறை உதவி இயக்குனரிடம் மனு அளிக்கப்பட்டது.

விருதுநகர்


நலிந்த கிராமிய கலைஞர்களுக்கு நிதி உதவி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலை பண்பாட்டு துறை உதவி இயக்குனரிடம் மனு அளிக்கப்பட்டது.

குறைதீர்க்கும் கூட்டம்

விருதுநகர் மாவட்ட நலிந்த கிராமிய கலைஞர்கள் நல சங்கத்தின் தலைவர் முருகேசன், மண்டல கலை பண்பாட்டு துறை உதவி இயக்குனருக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

விருதுநகர் மாவட்டத்தில் கலெக்டர் தலைமையிலும் தங்கள் முன்னிலையிலும் கிராமிய கலைஞர் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் கிராமிய கலைஞா்களின் நலன் கருதி பல்வேறு கோரிக்கை மனுக்கள் அளித்தோம். அதிலும் குறிப்பாக நலிந்த கிராமிய கலைஞர்களுக்கு நிதி உதவி கோரி தங்களால் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பங்கள் இயல், இசை, நாடக மன்றத்திற்கு அனுப்பப்பட்டது.

கலைஞர்களுக்கு உதவி

இந்த மனுக்கள் அனுப்பப்பட்டு 3 ஆண்டுகள் ஆகியும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. மேலும் கலைமாமணி விருது மற்றும் இசைக்கருவிகள் பெறுவோர் பட்டியலும் வெளியிடப்படவில்லை என்பது தொடர்பாக மனுவும் கொடுத்தோம்.

கிராமிய கலைஞர்கள் கலை பண்பாட்டு துறைக்கு அனுப்பும் கோரிக்கை மனுக்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படாத நிலை நீடிக்கிறது. எனவே பாதிக்கப்படும் நலிந்த கிராமிய கலைஞர்களுக்கு உதவி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


Next Story