மறைமலைநகர் தீயணைப்பு நிலையம் சார்பில் தீ விபத்து விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி


மறைமலைநகர் தீயணைப்பு நிலையம் சார்பில்  தீ விபத்து விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி
x

மறைமலைநகர் தீயணைப்பு நிலையம் சார்பில் தீ விபத்து விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி மறைமலைநகர் தீயணைப்பு நிலைய அலுவலர் தலைமையில் நடைபெற்றது.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் தீயணைப்பு நிலையம் சார்பில் வீட்டில் திடீரென ஏற்படும் கியாஸ் சிலிண்டர் தீ விபத்து உள்ளிட்ட பல்வேறு தீ விபத்துகளில் இருந்து தங்களை எப்படி பாதுகாத்து கொள்வது குறித்தும் மற்றும் இயற்கை பேரிடர் காலத்தில் இருந்து தங்களை எப்படி காத்து கொள்வது என்பது குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி மறைமலைநகர் நகராட்சியில் உள்ள கூடலூர் அரசு நடுநிலைபள்ளியில் மறைமலைநகர் தீயணைப்பு நிலைய அலுவலர் வீரராகவன் தலைமையில் நடைபெற்றது. இதில் தீயணைப்பு வீரர்கள் தீ விபத்து தடுப்புகள் குறித்து மாணவர்களுக்கு செயல் விளக்கம் அளித்தனர். மேலும் மழைக்காலங்களில் இடர்பாடுகளில் சிக்கி தவிப்பவர்கள், மேலும் ஆறு, ஏரி, குளங்களில் தண்ணீரில் மூழ்குபவர்களை மீட்பது குறித்தும் விளக்கம் அளித்தனர். இதில் பள்ளி மாணவ- மாணவிகள் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story