திருமலா விரைவு ரெயிலில் தீ விபத்து - சிகரெட் துண்டால் விபரீதம்...!
திருப்பதி ரெயில் நிலையத்தில் திருமலா விரைவு ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டது.
திருப்பதி,
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாடு முழுவதிலும் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நாள்தோறு வந்து செல்கின்றனர். இவர்கள் பஸ், ரெயில் பயணத்தையே பெரும்பாலும் பயன்டுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் திருமலா விரைவு ரெயில் இன்று காலை விசாகப்பட்டினத்தில் இருந்து திருப்பதி வந்தது. இதனால் பயணிகள் அனைவரும் ரெயிலில் இருந்து வெளியேர தொடங்கி உள்ளனர். அப்போது எஸ் 6 முன்பதிவு பெட்டியில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை கண்டு பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர், விரைந்து செயல்பட்ட ரெயில்வே ஊழியர்கள் எஸ் 6 முன்பதிவு பெட்டியின் கழிவறையின் மேல்பகுதியில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தால் திருப்பதி ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தற்போது, விபத்து குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், கழிவறையில் கிடந்த சிகரெட் துண்டுகளே தீ விபத்துக்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது.
திருப்பதி ரெயில் நிலையத்தில் பயணிகள் அனைவரும் இறங்கிய போது ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் விபத்து தவிற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.