தீயணைப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
சேரன்மாதேவி சிவந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தீயணைப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
திருநெல்வேலி
சேரன்மாதேவி:
சேரன்மாதேவி சிவந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தீயணைப்புத்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. சேரன்மாதேவி தீயணைப்பு நிலைய அலுவலர் (ெபாறுப்பு) பலவேசம், தீயினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அதிலிருந்து தம்மை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துக்கூறினார். மேலும் தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு குறித்து செயல்விளக்கம் செய்து காட்டினர். பள்ளி செயலாளர் காமராஜ் சிறப்புரையாற்றினார். முன்னதாக, பள்ளி முதல்வர் மரிய ஹெலன் சாந்தி வரவேற்று பேசினார். முடிவில் தமிழ் ஆசிரியை லட்சுமி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story