தீத்தடுப்பு விழிப்புணர்வு முகாம்
தாராபுரத்தை அடுத்த கொளத்துப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தீத்தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
திருப்பூர்
தாராபுரம்
தாராபுரத்தை அடுத்த கொளத்துப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தீத்தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. தாராபுரம் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையில் தீயணைப்புத்துறையினர் கலந்துகொண்டனர். முகாமில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதை முன்னிட்டு மழைக்காலங்களில் தங்களை எவ்வாறு? பாதுகாத்து கொள்வது, தீ விபத்து ஏற்படும் போது பதட்டம் அடையாமல் எவ்வாறு செயல்படவேண்டும். மேலும் புயல், வெள்ளக்காலங்களில் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை எவ்வாறு காப்பாற்ற வேண்டும் என்று செய்முறை விளக்கம் அளித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் கந்தசாமி, பள்ளி முதுநிலை ஆசிரியர் வெங்கிடுசாமி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உள்பட ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story