பேட்டரி கடையில் தீ
நெல்லையில் பேட்டரி கடையில் தீ விபத்து ஏற்பட்டது.
திருநெல்வேலி
பாளையங்கோட்டை:
நெல்லை பெருமாள்புரம் என்.எச். காலனி 10-வது தெருவை சேர்ந்தவர் ஆனந்த். இவரின் மனைவி வித்யாதேவி. இவர் பெருமாள்புரம் 6-வது தெருவில் மோட்டார் சைக்கிள்கள் பேட்டரிகளுக்கு சார்ஜ் செய்து கொடுக்கும் கடை வைத்து உள்ளார். இந்த கடையில் நேற்று மாலையில் பேட்டரி சார்ஜ் செய்து கொண்டு இருந்த போது எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர் வெட்டும் பெருமாள், நிலைய அலுவலர் ராஜா ஆகியோர் தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பேட்டரிகள், அட்டை பெட்டிகள் எரிந்து நாசமாகின. இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story