அரசு பள்ளியில் தீ பாதுகாப்பு ஒத்திகை


அரசு பள்ளியில் தீ பாதுகாப்பு ஒத்திகை
x

அரசு பள்ளியில் தீ பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.

கரூர்

கரைப்பாளையம் ஆலமரத்து மேட்டில் உள்ள அரசு ஆரம்பப்பள்ளி வளாகத்தில் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறை சார்பில் தீ பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஒத்திகை நடைபெற்றது. இதில் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு தீ பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஒத்திகையில் ஈடுபட்டனர். அப்போது மண்எண்ணெய் அடுப்பு எரியும்போது மண்எண்ணெயை நிரப்பக்கூடாது. மின்சார பொருட்கள், மின் இணைப்புகள் குழந்தைகளுக்கு எட்டும் வகையில் இருக்கக் கூடாது. குழந்தைகளை சமையல் அறையில் தனியாக விட்டு வெளியே செல்லக்கூடாது. மின்சார தீ விபத்து ஏற்பட்ட உடனே மின் இணைப்பு துண்டிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு ஒத்திகை செய்து தீயணைப்பு வீரர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story