வடகிழக்கு பருவமழையையொட்டி தீயணைப்பு வீரர்கள் ஒத்திகை


வடகிழக்கு பருவமழையையொட்டி தீயணைப்பு வீரர்கள் ஒத்திகை
x

வடகிழக்கு பருவமழையையொட்டி தீயணைப்பு வீரர்கள் ஒத்திகையில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை

வடகிழக்கு பருவமழையையொட்டி பேரிடர் காலங்களில் மீட்பு பணியில் ஈடுபடுவது எப்படி? என்பது தொடர்பாக தீயணைப்பு துறையினர் ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பொதுமக்களுக்கு செயல்விளக்கம் அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். இந்த ஒத்திகையானது மாவட்ட தீயணைப்பு அலுவலர் பானுப்பிரியா உத்தரவின் பேரில் ஆங்காங்கே நடத்தப்பட்டு வருகிறது. கறம்பக்குடி அருகே நரங்கியப்பட்டு என்ற கிராமத்தில் பேரிடர் மேலாண்மை தொடர்பான ஒத்திகை பயிற்சி தீயணைப்பு வீரர்கள் சார்பில் நடைபெற்றது. இதில் நீர்நிலைகளில் மூழ்கியவர்களை பாதுகாப்பாக மீட்பது எப்படி? என்பது உள்ளிட்ட செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

1 More update

Next Story