போலீசாருக்கு முதலுதவி பயிற்சி


போலீசாருக்கு முதலுதவி பயிற்சி
x
தினத்தந்தி 10 July 2023 11:12 PM IST (Updated: 11 July 2023 3:44 PM IST)
t-max-icont-min-icon

பாணாவரத்தில் போலீசாருக்கு முதலுதவி பயிற்சி நடந்தது.

ராணிப்பேட்டை

பாணாவரம் போலீஸ் நிலையத்தில் போலீசாருக்கு முதலுதவி பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சியில் சோளிங்கர், காவேரிப்பாக்கம், பாணாவரம், நெமிலி, கொண்டப்பாளையம், அவளூர் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் இருந்து சுமார் 40-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்துகொண்டனர்.

சென்னை அப்பல்லோ மருத்துவமனையின் முதலுதவி பயிற்சி நிபுணர்களான அருண்குமார், ரோஹித் ஆகியோர் கலந்துகொண்டு போலீசாருக்கு பயிற்சி அளித்தனர். அப்போது விபத்தில் சிக்குபவர்களுக்கு எப்படி முதலுதவி அளிப்பது, நெஞ்சு வலியிலிருந்து ஒருவரை எவ்வாறு மீட்பது, தீவிபத்திலிருந்து காப்பாற்றி முதலுதவி அளிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.


Next Story