உலகின் உயரமான போர்முனையான சியாச்சினில் முதல் பெண் ராணுவ அதிகாரி நியமனம் - மக்கள் நீதி மய்யம் வாழ்த்து


உலகின் உயரமான போர்முனையான சியாச்சினில் முதல் பெண் ராணுவ அதிகாரி நியமனம் - மக்கள் நீதி மய்யம் வாழ்த்து
x

உலகின் உயரமான போர்முனையான சியாச்சினில் பணியமர்த்தப்பட்ட முதல் பெண் ராணுவ அதிகாரி சிவா சவுகானுக்கு மக்கள் நீதி மய்யம் வாழ்த்து தெரிவித்துள்ளது.

சென்னை,

உலகின் உயரமான போர்முனையான சியாச்சினில் பணியமர்த்தப்பட்ட முதல் பெண் ராணுவ அதிகாரி சிவா சவுகானுக்கு மக்கள் நீதி மய்யம் வாழ்த்து தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

"உலகின் மிக உயர்ந்த இடத்தில் அமைந்துள்ள போர்க்களமான சியாச்சின் பனிமலையில், இந்திய நாட்டைப் பாதுகாக்கும் பணியில் அமர்த்தப்பட்ட முதல் பெண் ராணுவ அதிகாரி என்ற பெருமையைப் பெற்றுள்ள, ஃபயர் அண்ட் ப்யூரி கார்ப்ஸ் பிரிவைச் சேர்ந்த கேப்டன் சிவா சவுகானை மக்கள் நீதி மய்யம் வாழ்த்துகிறது.

கடும் பயிற்சிகளுக்குப் பின்னர், சியாச்சின் பனிச் சிகரத்தில் உள்ள குமார் போஸ்ட்டில் ராணுவப் பணிக்காக அனுப்பப்படும் கேப்டன் சிவா சவுகான், கடல் மட்டத்திலிருந்து 15,632 அடி உயரத்தில் அமைந்துள்ள சிகரத்தின் உச்சியில் தேசத்தைக் காக்கும் பணியில் ஈடுபட உள்ளது மிகவும் பெருமைக்குரியது.

ராஜஸ்தானைச் சேர்ந்த சிவா சவுகான், சென்னையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றவர் என்பது கூடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது. 11 வயதில் தந்தையை இழந்து, கடும் முயற்சியால் ராணுவ அதிகாரியான இவரைப் பின்பற்றி, பல்வேறு துறைகளிலும் சாதிக்க பெண்கள் முன்வர வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



Next Story