நெல் வயலில் மீன் வளர்ப்பு பயிற்சி


நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நெல் வயலில் மீன் வளர்ப்பு பயிற்சி நடந்தது.

திருவாரூர்

நீடாமங்கலம்;

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நெல் வயலில் மீன் வளர்ப்பு பற்றிய பயிற்சி மற்றும் வயல் விழா நடைபெற்றது. சென்னை நபார்டு வங்கி பொது மேலாளர் ஜோதிசீனிவாஸ் பேசினார். அப்போது அவா் கூறியதாவது:-நபார்டு வங்கியின் திட்டமான நெல் வயலில் மீன் வளர்ப்பு நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விவசாயிகள் தங்கள் வயல்வெளிகளில் இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் மிகச்சிறந்த பயனை அடைந்து வருகின்றனர். நபார்டு வங்கி புதுமையான, வேளாண்மை அறிவியல் நிலையம் மூலமாக, அறிவியல்பூர்வமான வேளாண்மைத் திட்டங்களை விவசாயிகளுக்கு நிறைவேற்றுவதற்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்றார். பொது மேலாளர் விவசாயிகளின் நிறை குறைகளை கேட்டறிந்தார். இதில் நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் எஸ். விஸ்வந்த்கண்ணா, நபார்டு வங்கி திட்டங்கள் குறித்து பேசினாா். முன்னதாக வேளாண்மை அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் து. பெரியார்ராமசாமி வரவேற்றார். இதில் சுமார் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story