கடலில் மீன் பிடித்த மீனவர் திடீர் சாவு

கடலில் மீன் பிடித்த மீனவர் உயிரிழந்தார்.
கடலில் மீன் பிடித்த மீனவர் திடீர் சாவு
Published on

தொண்டி, 

தொண்டி அருகே உள்ள பாசிப்பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் குழந்தைவேல்(வயது 45). சம்பவ தினத்தன்று இவர் அதே கிராமத்தை சேர்ந்த மாதவன் என்பவருடைய பைபர் படகில் மீனவர்களுடன் கடலுக்கு மீன் பிடிக்க சென்றார். கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த போது திடீரென குழந்தை வேலுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.

உடனே அவருடன் கடலுக்கு சென்ற மீனவர்கள் குழந்தைவேலுவை கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தைவேலு ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து தொண்டி கடற்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com