பார்வையற்றவர் மீது மோதாமல் இருக்க முயன்ற போது மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி விழுந்த மீனவர் சாவு

பார்வையற்றவர் மீது மோதாமல் இருக்க முயன்ற போது மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி விழுந்த மீனவர் சாவு
x

பார்வையற்றவர் மீது மோதாமல் இருக்க முயன்ற போது, மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி விழுந்த மீனவர் இறந்தார்.

கன்னியாகுமரி

குளச்சல்,

பார்வையற்றவர் மீது மோதாமல் இருக்க முயன்ற போது, மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி விழுந்த மீனவர் இறந்தார்.

இந்த பரிதாப சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:-

மீனவர்

குளச்சல் அருகே குழந்தை ஏசு காலனியை சேர்ந்தவர் சேசடிமை (வயது 41), மீனவர். சம்பவத்தன்று இரவு சேசடிமை குளச்சலில் ஒரு திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் அவர் மோட்டார் சைக்கிளில் அண்ணாசிலை சந்திப்பில் வரும் போது, 50 வயது மதிக்கத்தக்க கண் பார்வையற்ற ஒருவர் சாலையின் குறுக்கே வந்தார்.

அவர் மீது மோட்டார் சைக்கிள் மோதாமல் இருக்க சேசடிமை 'பிரேக்' போட்டு நிறுத்த முயன்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்து சேசடிமை நிலைதடுமாறி கீேழ விழுந்ததில் தலையில் படுகாயம் ஏற்பட்டது.

சாவு

உடனே அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சேசடிமை பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து குறித்து அவருடைய அண்ணன் ஜான்சன் குளச்சல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

1 More update

Next Story