மாங்குளத்தில் மீன் பிடி திருவிழா


மாங்குளத்தில் மீன் பிடி திருவிழா
x

சாணார்பட்டி அருகே மாங்குளத்தில் மீன்பிடி திருவிழா நடந்தது.

திண்டுக்கல்

சாணார்பட்டி அருகே தி.பள்ளப்பட்டியில் மாங்குளம் உள்ளது. கடந்த ஆண்டு பெய்த பருவமழையினால் இந்த குளம் நிரம்பியது. தற்போது குளத்தில் சிறிதளவு மட்டுமே தண்ணீர் உள்ளது. குளத்தில் மீன்பிடி திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதனையடுத்து நேற்று காலை கிராம மக்கள் மாங்குளத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அங்குள்ள கருப்புசாமி கோவிலில் சிறப்பு பூஜை நடத்தினர். அதன்பிறகு மீன்பிடி திருவிழா தொடங்கியது. இதைத்தொடர்ந்து தி.பள்ளப்பட்டி, மணியக்காரன்பட்டி, ராமராஜபுரம், மந்தநாயக்கன்பட்டி, வேட்டைக்காரன் புதூர், பாறைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் குளத்தில் இறங்கி போட்டிப்போட்டு மீன்களை பிடித்தனர். ஊத்தா கூடை, வலை மூலம் மீன்கள் பிடிக்கப்பட்டது. கட்லா, ஜிலேபி, விறால், பாறை, கெண்டை உள்ளிட்ட மீன்கள் கிடைத்தன. தங்களுக்கு கிடைத்த மீன்களை கொண்டு சென்ற கிராம மக்கள் அதனை சமைத்து சாப்பிட்டனர்.


Next Story