கோவையில் பூக்கள் விலை குறைவு


கோவையில் பூக்கள் விலை குறைவு
x
தினத்தந்தி 13 July 2023 4:30 AM IST (Updated: 13 July 2023 4:30 AM IST)
t-max-icont-min-icon

காய்கறி, மளிகை பொருட்கள் உயர்ந்தநிலையில் கோவையில் பூக்கள் விலை மட்டும் குறைந்து உள்ளது.

கோயம்புத்தூர்

ஆர்.எஸ்.புரம்

காய்கறி, மளிகை பொருட்கள் உயர்ந்தநிலையில் கோவையில் பூக்கள் விலை மட்டும் குறைந்து உள்ளது.

காய்கறி, மளிகை விலை உயர்வு

தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாக காய்கறிகளின் விலை உச்சத்தில் இருந்து வருகிறது. ஒரு கிலோ தக்காளியின் விலை சில்லரை விற்பனை செய்யும் மளிகை கடைகளில் ரூ.110 -ஐ தாண்டி இருக்கும் நிலையில் மற்ற காய்கறிகளின் விலையும் ரூ.80 முதல் 100 ரூபாயை நெருங்கியே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதில் குறிப்பாக சின்ன வெங்காயம் கிலோ ரூ.200-க்கும் மேல் விற்பனையாகிறது.காய்கறிகளின் விலை உயர்வில் இருந்து மீண்டு வரும் முன்பே மளிகை பொருட்களின் விலையும் உயர்ந்து மக்களுக்கு பேரிடியாக வந்தது.

பூக்கள் விலை குறைவு

கோவையில் காய்கறிகள், மளிகை பொருட்களின் விலை உயர்ந்தநிலையில் பூக்கள் விலை மட்டும் ஓரளவுகுறைந்து உள்ளன. காரணம் தேவை குறைவு, வரத்து அதிகரிப்பு என்று கூறப்படுகிறது. கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள பூமார்க்கெட்டில் கடந்த வாரம் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.500 முதல் ரூ.600 வரை விற்பனையானது. அதுவே நேற்று ரூ.400-க்கு விற்றது.

இதுபோன்று ஒரு கிலோ முல்லைப்பூ ரூ.240, செவ்வந்தி ரூ.200 முதல் ரூ.240, ஜாதி மல்லி ரூ.320, அரளி ரூ.100, பட்டன் ரோஸ் ரூ.170, 10 ரூபாய்க்கு 3 தாமரை என்று பூக்களின் விலை குறைந்து விற்பனை செய்யப்பட்டது. அடுத்த வாரம் ஆடி மாதம் பிறந்ததும் பூக்களின் தேவைகள் இருக்கும் என்பதால் அவற்றின் விலை உயர வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


Next Story