நீலகிரியில் ராகுல் காந்தியின் ஹெலிகாப்டரில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை


நீலகிரியில் ராகுல் காந்தியின் ஹெலிகாப்டரில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை
x
தினத்தந்தி 15 April 2024 5:09 AM GMT (Updated: 15 April 2024 5:30 AM GMT)

தி.மு.க வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள ராகுல் காந்தி இன்று காலை ஹெலிகாப்டரில் நீலகிரி வருகை தந்தார்.

நீலகிரி,

நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் வருகிற 19-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்காக தங்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முக்கிய தலைவர்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில், நீலகிரியில் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக ராகுல் காந்தி இன்று ஹெலிகாப்டர் மூலமாக வருகை தந்தார். அப்போது அங்கு இருந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், ராகுல் காந்தியின் ஹெலிகாப்டரில் சோதனை மேற்கொண்டனர்.

சுமார் 10 நிமிடங்கள் வரை இந்த சோதனை நீடித்தது. ஹெலிகாப்டரில் இருந்த பை உள்பட அனைத்தையும் ஒன்று விடாமல் அதிகாரிகள் சோதனை செய்தனர். இந்த சோதனையில் பணமோ பொருட்களோ எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து, அங்கிருந்து அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர்.


Next Story