தீவன உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சி


தீவன உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சி
x

கோபுராஜபுரத்தில் தீவன உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சி நடந்தது.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

திருமருகல் வட்டாரம் கோபுராஜபுரம் கிராமத்தில் 2022-23-ம் ஆண்டிற்கான வேளாண்மை தொழிற்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் மாவட்டத்திற்குள்ளான தீவன உற்பத்தி தொழிற் நுட்ப பயிற்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வட்டார துணை வேளாண்மை அலுவலர் தெய்வகுமார் தலைமை தாங்கினார். கோபுராஜபுரம் ஊராட்சி மன்ற தலைவர் உமாமகேஸ்வரி ரமேஷ் முன்னிலை வகித்தார். சிக்கல் வேளாண் அறிவியல் நிலைய கால்நடை மருத்துவர் முத்துக்குமார் முகாமில் கலந்துக்கொண்டு கால்நடைகளுக்கு வரும் நோய், அதற்கான சிகிச்சை முறைகள் குறித்து பேசினார். இதற்கான ஏற்பாடுகளை வட்டார தொழிற்நுட்ப மேலாளர் மகேஸ்வரி மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் முகமது சாகீர் ஆகியோர் செய்திருந்தனர். முகாமில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள்கலந்துக்கொண்டனர்.


Next Story