சத்துணவு ஊழியர்கள் தர்ணா
சத்துணவு ஊழியர்கள் தர்ணா
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் நேற்று மாலை சம்பத்நகர் பகுதியில் இருந்து ஊர்வலமாக கலெக்டர் அலுவலகம் சென்று அங்கு கோரிக்கைகளை விளக்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட திட்டமிட்டு இருந்தனர். ஆனால் இந்த ஊர்வலத்துக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. இதனால் சத்துணவு ஊழியர்கள் சம்பத் நகரிலேயே கோரிக்கைகளை விளக்கி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் தனுஷ்கோடி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர்கள் செல்வி, சுப்புலட்சுமி, கவுரி, மணிமேகலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளிக்கூடங்களில் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களை கொண்டு செயல்படுத்த வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். சத்துணவு மையத்துக்கு தேவையான கியாஸ் சிலிண்டரை அரசே வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க மாநில துணைத்தலைவர் பாஸ்கர்பாபு மற்றும் சத்துணவு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.