பள்ளி மாணவிக்கு அமைச்சர் கீதாஜீவன் பாராட்டு


பள்ளி மாணவிக்கு அமைச்சர் கீதாஜீவன் பாராட்டு
x
தினத்தந்தி 21 May 2023 12:30 AM IST (Updated: 21 May 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

தேசிய தடகள போட்டியில் பதக்கம் வென்ற பள்ளி மாணவிக்கு அமைச்சர் கீதாஜீவன் பாராட்டு தெரிவித்தார்.

தூத்துக்குடி

டெல்லியில் தேசிய அளவிலான தடகள போட்டி கடந்த மாதம் நடந்தது. இதில் தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் பள்ளி மாணவி காயத்ரி கலந்துகொண்டார். அவர் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில், 3-ம் இடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்றார். இதையடுத்து மாணவிக்கு பாராட்டு விழா பள்ளியில் நேற்று நடந்தது. பள்ளி செயலர் ஏ.பி.சி.வீ.சண்முகம் தலைமை தாங்கினார்.

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, மாணவி காயத்ரிக்கு பரிசு வழங்கி பாராட்டினார். மேலும் அந்த பள்ளியில் பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர் செல்வகுமாருக்கும், பரிசு வழங்கி பாராட்டினார்.

இந்த நிகழ்ச்சியில், தி.மு.க. நகரச் செயலர் ஆனந்த சேகரன், காங்கிரஸ் மாநகர் மாவட்டத்தலைவர் முரளிதரன், தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி, பயிற்சியாளர் ஸ்டீபன், மாணவியின் பெற்றோர், ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story