நாகர்கோவிலில்பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சைக்கிள் போட்டி


நாகர்கோவிலில்பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சைக்கிள் போட்டி
x
தினத்தந்தி 14 Oct 2023 6:45 PM GMT (Updated: 14 Oct 2023 6:46 PM GMT)

நாகர்கோவிலில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சைக்கிள் போட்டி நடந்தது.

கன்னியாகுமரி

நாகர்கோவிலில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சைக்கிள் போட்டி நடந்தது.

சைக்கிள் போட்டி

அண்ணா பிறந்த நாளையொட்டி விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான விரைவு சைக்கிள் போட்டி நாகர்கோவிலில் நேற்று நடந்தது. புத்தேரியில் இருந்து அப்டா மார்க்கெட் வரை 4 வழிச்சாலை வழியாக போட்டி நடைபெற்றது.

13 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு 15 கிலோ மீட்டரும், மாணவிகளுக்கு 10 கிலோ மீட்டரும், 15 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு 20 கிலோ மீட்டரும், மாணவிகளுக்கு 15 கிலோ மீட்டரும், 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு 20 கிலோ மீட்டரும், மாணவிகளுக்கு 20 கிலோ மீட்டரும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

வெற்றி பெற்றவர்கள்

இந்த போட்டியை கோட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். போட்டியில் 13 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் காரங்காடு புனித அலோசியஸ் பள்ளி மாணவர் ரெனோ முதல் பரிசையும், வடசேரி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் ஜெய்வன் அன்டேல் 2-ம் பரிசையும், கார்மல் மேல்நிலைப்பள்ளி மாணவர் ஹரால்டு சேம் 3-ம் பரிசையும் பெற்றனர்.

பெண்கள் பிரிவில் காரங்காடு புனித அலோசியஸ் பள்ளி மாணவி அன்லின் லிரின்டே முதல் பரிசையும், முக்குலம்பாடு புனித போலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ஆதர்ஷிகா 2-ம் பரிசையும், நாகர்கோவில் பிஷப் ரெமிஜயுஸ் பள்ளி மாணவி தேஜா மீனாட்சி 3-ம் பரிசையும் பெற்றனர்.

15, 17 வயதுக்குட்பட்ட பிரிவு

15 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் வடசேரி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் அகில்ராம் முதல் பரிசையும், காரங்காடு புனித அலோசியஸ் பள்ளி மாணவர் ஜெயந்த் குமார் 2-ம் பரிசையும், ஏழுதேசப்பற்று அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் சுவின் 3-ம் பரிசையும் பெற்றனர். பெண்கள் பிரிவில் வெட்டூர்ணிமடம் புனித அலோசியஸ் பள்ளி மாணவிகள் சுருதி முதல் பரிசையும், ஆர்த்தி 2-ம் பரிசையும், அஸ்மிதா 3-ம் பரிசையும் பெற்றனர். 17 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் நாகர்கோவில் எஸ்.எல்.பி. மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஸ்ரீமஞ்சு நாதன் முதல் பரிசையும், ஸ்ரீமஞ்சு தேவன் 2-ம் பரிசையும், கென்னி தாமஸ் 3-ம் பரிசையும் பெற்றனர். பெண்கள் பிரிவில் காரங்காடு புனித அலோசியஸ் பள்ளி மாணவிகள் ஆஸ்மி முதல் பரிசும், ஆன்சி 2-ம் பரிசும், வெட்டூர்ணிமடம் புனித அலோசியஸ் பள்ளி மாணவி ஜெனிட்டா 3-ம் பரிசும் பெற்றனர்.

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஓய்வு பெற்ற முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் (ஓய்வு) விஜயகுமாரி பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் விளையாட்டு அதிகாரி ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story