இறந்த மயிலுடன் சுற்றித்திரிந்தவரிடம் வனத்துறை அதிகாரிகள் விசாரணை

இறந்த மயிலுடன் சுற்றித்திரிந்தவரிடம் வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்
திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் நேற்று காலை இற்நத மயிலுடன் ஒருவர் சுற்றி திரிந்தார். இதை கண்ட போக்குவரத்து போலீசார் அந்த நபரை பிடித்து மயிலுடன் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது, ஜங்ஷன் பகுதி ரெயில்வே தண்டவாளம் அருகே மயில் இறந்து கிடந்ததாகவும், அதை எடுத்து வைத்து இருந்ததாகவும் அந்த நபர் கூறியுள்ளார். இதையடுத்து வனத்துறையினர் இறந்த மயிலுக்கு பிரேத பரிசோதனை செய்துவிட்டு அந்த மயிலை வனப்பகுதியில் புதைத்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





