கறவை மாடுகளுடன் வந்து பாலை தரையில் கொட்டி போராட்டம்

கறவை மாடுகளுடன் வந்து பாலை தரையில் கொட்டி போராட்டம்
கறவை மாடுகளுடன் வந்து பாலை தரையில் கொட்டி போராட்டம்
Published on

ஊத்துக்குளி

பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கக்கோரி ஊத்துக்குளி அருகே உள்ள சேடர்பாளையத்தில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் கறவை மாடுகளுடன் வந்து பாலை தரையில் கொட்டி போராட்டம் நடத்தினர்.

போராட்டம்

மாடுகளுக்கு கொடுக்கப்படும் தவிடு, பருத்திகொட்டை, புண்ணாக்கு, கலப்பு தீவனம் ஆகியவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சோளத்தட்டை உள்ளிட்ட தீவனம் உற்பத்தி செலவுகள் அதிகரித்து விட்டது. ஆனாலும் 2019-ம் ஆண்டுக்கு பின் பால் கொள்முதல் விலையை தமிழக அரசும், ஆவின் நிர்வாகமும் உயர்த்தி தரவில்லை. எனவே பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு ரூ.10 உயர்த்தி வழங்க வேண்டும். பால் நிலுவை தொகையை உடனடியாக வழங்க வண்டும், கலப்பு தீவனத்திற்கு மானியம் கொடுக்க வேண்டும் போன்ற கோரிக்கையை வலியுறுத்தி ஊத்துக்குளி அருகே உள்ள சேடர்பாளையத்தில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் முன்பு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம் சார்பாக கறவை மாடுகளுடன் போராட்டம் நடைபெற்றது.

பாலை தரையில் கொட்டினர்

போராட்டத்திற்கு ஊத்துக்குளி தாலுகா தலைவர் பழனிசாமி தலைமை தாங்கினார். செயலாளர் சுப்பிரமணி முன்னிலை வகித்தார். தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் குமார், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க மாவட்ட கொளந்தசாமி ஆகியோர் கோரிக்கையை விளக்கி பேசினார்கள்.

போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருப்பூர் வடக்கு தலைவர் ரங்கசாமி, ஊத்துக்குளி தாலுகா துணைத் தலைவர் கோபாலகிருஷ்ணன், பொருளாளர் ரவி உட்பட சேடர்பாளையம் பால் உற்பத்தியாளர் சங்கத்தை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கறவை மாடுகளுடன் கலந்து கொண்டனர்.

பின்பு பாலை தரையில் ஊற்றி பால் கொள்முதல் விலையை உடனே ஏற்றி தர வேண்டும் என்று தனது கோப ஆவேசத்தை தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com